புதன், 9 செப்டம்பர், 2015

விண்வெளி தொழில்நுட்பத்தின்


விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பாட்டிற்கும் ஆளுமைக்கும் பயன்படும் வகையில் இயங்கும் கருவிகளையும் செயலிகளையும் பிரபலப்படுத்தும் தேசிய மாநாட்டில் பிரதமரின் உரை

     புதுதில்லி, 07 செப்டம்பர், 2015

  
விண்வெளி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பாட்டிற்கும் ஆளுமைக்கும் பயன்படும் வகையில் இயங்கும் கருவிகளையும் செயலிகளையும் பிரபலப்படுத்தும் தேசிய மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது.  இதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

        இக்கூட்டத்தில் செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தும் செயல் முறை விளக்கங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உயரதிகாரிகளால் அளிக்கப்பட்டது. 

     அரசு நிர்வாகத்தில் எல்லாப் பிரிவுகளிலும் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது பற்றியும் புதிய முயற்சிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் பிரதமர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.  2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தாம் சென்றிருந்தபோது இது குறித்து வலியுறுத்தியதாகவும் அதன் பின்னர் அரசின் பல துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மனநிறைவை அளிப்பதாகவும் அவர் கூறினார். 

மத்திய அரசின் எல்லா அமைச்சகங்களும் 2015 ஆம் ஆண்டு ஏதாவது ஒரு பிரிவில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் அப்போது கேட்டுக் கொண்டார். 

விண்வெளி தொழில்நுட்பத்திற்கு செலவிடும் தொகையைப் பற்றி குறிப்பிடுகையில், இந்தியாவில் உள்ள சாதாரண மனிதனும் அவனுக்குத் தேவையானவற்றை முழுமையாக அடையும் வகையிலான குறிக்கோளை நாம் அடைந்தே தீர வேண்டும் என்று இந்திய அறிவியல் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.  அரசு துறைகள் தங்களுடைய பணிகளில் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் மிக அதிக அளவில் ஆர்வம் காட்டுவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  நம்மிடையே உள்ள ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி செயலாக்குவதில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

சாதாரண மக்களும் பயன் அடையும் வகையில் விண்வெளி தொழில்நுட்பத்தை எவ்விதமான பிரிவுகளில் பயன்படுத்த முடியும் என்பதை திரு. நரேந்திர மோடி விளக்கிக் கூறினார்.  மீனவர்களுக்கு அதிக அளவு மீன் கிடைக்கும் இடங்கள்,  பிரதம மந்திரி கிரிஷி சின்சை யோஜனா திட்டத்தின் கீழ் பாசன வசதிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அறிதல்,  சட்ட விரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபடுவோரை கண்டுபிடித்தல் போன்ற உதாரணங்களை குறிப்பிட்டார். 

நல்லாட்சியை வெளிப்படையாகவும் பொறுப்புள்ளதாகவும் நடத்த இத்தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது என்று திரு. நரேந்திர மோடி கூறினார்.  விண்வெளி விஞ்ஞானத்திற்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே எவ்விதமான இடைவெளியும் இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

உலக பொருளாதாரத்தின்

உலக பொருளாதார நிலைக் குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

     புதுதில்லி, 07 செப்டம்பர், 2015

  
உலக பொருளாதாரத்தின் சமீபத்திய போக்கு மற்றும் இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் குறித்து புதுதில்லியில் நாளை காலை நடைபெற இருக்கும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

     இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள், அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரிகள், தொழில் துறை பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர் உட்பட 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

     பொருளாதாரத்தில் அண்மையில் காணப்பட்ட மாறுதல்களால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் இந்தியா அவற்றை சாதகமான முறையில் எவ்வாறு செயலாற்றுவது என்பது பற்றியும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

வரவேற்கிறோம்

வரவேற்கிறோம் 

முகப்பு (Home)