வியாழன், 8 அக்டோபர், 2015

நான்காவது சிப்பாய் கலகம் 20?? - Lt Col CR Sundar

 
 
ஆங்கிலேயர் ஆட்சியில் நம் நாட்டில் மூன்று முறை பெரிய அளவில் சிப்பாய் கலகங்கள் நடந்துள்ளன. அந்த கலகங்களை அடக்குவதில் ஆங்கிலேயர்கள் ஏராளமான இந்தியர்களை கொன்று குவித்தனர். இருப்பினும் அவை ஒவ்வொன்றும் நாட்டில் பல முக்கியமான மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன.
 
1.  வேலூர் சிப்பாய் கலகம் 1806
இது வேலூர் கோட்டையில் 1806ல் நடந்தது. இதற்கு பல காரணங்கள்சொல்லப்பட்டாலும் முக்கியகாரணம் சவுக்கடி தண்டனையே ஆகும்.தமிழர்கள் அதை ஏற்க மறுத்தனர். அந்த ஆண்டு வேலூரிலிரிந்து சிலசிப்பாய்கள் சென்னைக்கு இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை விசாரித்து அவர்களுக்கு சவுக்கடி தண்டனை அளிக்கப்பட்டது. அவர்கள் வேலூர்திரும்பியதும் கலவரம்வெடித்தது. 200க்கு அதிகமான ஆங்கிலேயர்கள்கொல்லப்பட்டனர். 100 சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்.
இறுதியில் சவுக்கடி தண்டனை சட்ட விரோதமாக்கப்பட்டது.
 
2.  இந்திய சிப்பாய் கலகம் 1857
இந்த கலகம் ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்தது மாட்டு மற்றும் பன்றி கொழுப்பு தடவியதோட்டாக்கள் என்றாலும் அப்போதைய ராணுவத்தில் பல காலமாக நிலவி வந்த அதிருப்தி அதன்பின்னணியில் இருந்தது. சம்பள உயர்வு, காலாகாலத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாமல் இருந்தது, எல்லா உயர் பதவிகளையும் ஐரோப்பியர்களே பிடித்துக் கொண்டார்கள் போன்றகோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வில்லை.
பல்லாயிரம் இந்தியர்களும் பல ஆங்கிலேயர்களும் இதில் மாண்டார்கள்.
இதன் முடிவில் இராணுவத்தில் சீர்திருத்தங்கள் வந்தன. முகலாய சாம்ராஜ்ஜியமும் கிழக்கிந்தியகம்பெனியும் மறைந்து விட்டன.
 
3.  கடற்படை சிப்பாய் கலகம் 1946
கடற்படையை சேர்ந்த முன்னிலை சங்கதியாளர் MS கான் என்பவரும் தந்தியாளர் மதன் சிங்என்பவரும் சேர்ந்து கடற்படை வேலைநிறுத்த மையம் என்ற இயக்கத்தை உருவாக்கி 1946ல்வேலை நிறுத்தம் ஆரம்பித்தனர்.
அதிக உயிர் சேதமின்றி அந்த கலகம் ஒடுக்கப்பட்டது என்றாலும் அன்று ஆண்டுகொண்டிருந்தஆங்கிலேயர்களுக்கு இந்திய சுதந்திர போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிவிட்டது என்பதுபுலனானது.
 
4.  OROP சிப்பாய் கலகம் 20??
இன்றைய அரசாங்கம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பணி புரியும் சிப்பாய்களின் வயதுகுறைந்ததாக இருக்கவேண்டும் என்பதால் சிறு வயதிலேயே சிப்பாய்களை சொற்பஓய்வூதியத்துடன் வீட்டுக்கு அனுப்புவதில் அரசாங்கம் தம்மை ஏமாற்றுகிறது என்பதை அவர்கள்நன்கு அறிந்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு 1975ஆம் ஆண்டு 20 வயது எட்டிய இரு இளைஞர்களை எடுத்துக்கொள்வோம்.ஒருவர் சிப்பாய் ஆகிறார், மற்றவர் அரசு ஊழியத்தில் சேருகிறார் என வைத்துக்கொள்வோம். 1990ல் தன் 35 ஆவது வயதில் 15 ஆண்டுகள் பணிக்குப்பின் சராசரி மாதம் ரூ 3,000 வரும் அளவுக்குஓய்வூதியத்துடன் சிப்பாய் ஆனவர் வெளியே அனுப்பப்படுகிறார். அனால் அரசு ஊழியர் 60 வயதுவரை பணி புரிந்து 2015ல் தான் வெளியே வருவார்.
ஆக 1990 லிருந்து 2015ஆம் ஆண்டு வரையிலான 25 ஆண்டுகளில் சிப்பாய் ஆனவர் ரூ. 9 லட்சம்வரை ஓய்வூதியம் பெற்றிருப்பார். ஆனால் அரசு ஊழியரோ சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும்இதர சலுகைகள் மூலம் ஏறக்குறைய ரூ. 1.25 கோடி சம்பாதித்துவிட்டு அதன் முடிவில் சிப்பாயைவிட பன் மடங்கு உயர்ந்த அளவு ஓய்வூதியம் பெற்று வெளியே வருவார்.
ஆகையால் தன் வாழ்க்கையின் முக்கிய ஆண்டுகளை தேசத்திற்காக அற்பணித்த சிப்பாய்களுக்குஅவ்வப்பொழுது ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். அதாவது ஒரே பதவியில் ஒரே அளவுஆண்டுகள் சேவை செய்திருந்தால் அவர்கள் எப்பொழுது ஒய்வு பெற்றிருந்தாலும் அவர்களுக்குஒரே அளவு ஓய்வூதியம் அளிக்கப்படவேண்டும். முன்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு, இன்று ஓய்வுபெறுபவர்களுக்கு என்ன ஓய்வூதியம் கிடைக்கிறதோ அதே அளவு ஓய்வூதியம்கொடுக்கவேண்டும். இதைத்தான் "சம சேவை சமச்சீர் ஓய்வூதியம்" அல்லது One Rank One Pension - OROP என குறிப்பிடுகிறோம்.
 
இன்று பணியில் இருக்கும் சிப்பாய்கள் நாளை தங்களுக்கும் இதே கதிதான் என்பதை நன்குஅறிவார்கள். மேலும் இந்த நிலை மாற முன்னாள் படை வீரர்கள் போராடுகிரார்கள் என்பதையும்அறிவார்கள். நியாயம் கேட்டு இவர்கள் கலகம் ஆரம்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இது நடக்கக்கூடாதவிஷயம் என்றாலும் மத்திய அரசின் திறமையற்ற கையாளுதலால் நடந்தாலும் நடக்கலாம்.
நாட்டு நலனை கருதி கலகத்தை தவிர்க்க அரசு OROP கூடிய சீக்கிரம் அளித்து விட வேண்டும் என வேண்டுகிறோம்.
  
 எழுதியவர் கர்னல் சுந்தர் psc MSc (Defence Studies)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக